Propellerads

About

Navigation
Recent News

“வரு”வுக்கு இன்று பிறந்தநாள்... ஹாப்பி பர்த்டே வரு...


சென்னையில் பட்டப்படிப்பு, எடின்பெர்க்கில் பட்டமேற்படிப்பு பின்னர் மும்பையில் உள்ள அனுபம்கெர் பள்ளியில் நடிப்பு பயிற்சி ஆகியவற்றை முடித்துவிட்டு கடந்த 2012ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'போடா போடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. முதல் படத்திலேயே தனது முத்திரை நடிப்பை பதித்து 'புலிக்கு பிறந்தது பூனையல்ல' என்பதை நிரூபித்தவர்.

பின்னர் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தால் பட்டை தீட்டப்பட்டார் வரலட்சுமி. 'தாரை தப்பட்டை' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்த படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டாத ஊடகங்களே இல்லை என்று கூறலாம்

தற்போது 'நிபுணன்', 'அம்மாயி', 'சத்யா', 'விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் வரலட்சுமி நடிப்பு மட்டுமின்றி சமூக சிந்தனையும் நிறைந்தவர். சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த வரலட்சுமி, நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாலியல்  தொல்லை உள்பட பெண் கலைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் அவரது சேவ் சக்தி செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த நல்ல முயற்சி வெற்றி பெறுவதோடு, கோலிவுட்டில் இன்னும் பல வெற்றி படங்களை கொடுக்க இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

 
Share
Banner

Post A Comment: