Propellerads
Navigation

சிக்கலில் ’காலா கரிகாலன்’

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “காலா கரிகாலன்” திரைப்படத்தின் தலைப்பு, கதை, அனைத்தும் தன்னுடையது என்றும், அவருடைய கதையை படக்குழுவினர் திருடி விட்டதாகவும் ராஜசேகரன் என்பவர் சென்னை ​பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


“கடந்த 1995, 1996ஆம் ஆண்டுகளில் 'கரிகாலன்' என்ற தலைப்பில் ரஜினி நடிக்கும் திரைப்படத்தை இயக்க முடிவு செய்தேன். இதற்காக ஒருமுறை ரஜினியையும் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டு திரைப்படம் குறித்து இன்னொரு நாளில் பேசலாம் என்று கூறிவிட்டார்.

நான் 'கரிகாலன்' தலைப்பை முறைப்படி பதிவு செய்துள்ளேன். இந்தத் திரைப்படத்தை தயாரிக்க நான் பலவித முயற்சிகள் செய்து கொண்டிருந்தபோது இதே தலைப்பில் சீயான் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பது தெரியவந்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.

இந்த நிலையில், தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா கரிகாலன்' என்ற திரைப்படம் உருவாகுவதாக விளம்பரங்களில் இருந்து தெரிந்து கொண்டேன். இதனை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்து, தீராத மன உலைச்சல் அடைந்துள்ளேன்.

என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும், கதியின் மூலக்கருவினையும் நடிகர் தனுஷ், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர்கள் திருடி 'கரிகாலன்' என்ற என்னுடைய தலைப்பை 'காலா கரிகாலன்' என்றும் என்னுடைய கதையையும் கதையின் மூலக்கருவையும் மறுவடிவமைத்து செய்து ரஜினிகாந்த் அவர்களை வைத்து திரைப்படத்தை ஆரம்பித்துள்ளனர்” என, தனது முறபை்பாட்டில் தெரிவித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: