Propellerads

About

Navigation
Recent News

வினோத் கண்ணா குடும்பத்திற்கு ரஜினி இரங்கல்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா இன்று புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் என்பதை பார்த்தோம். அவருடைய மறைவு பாலிவுட்டை மட்டுமின்றி இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வினோத் கண்ணா மறைவிற்கு தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது நண்பர் வினோத்கண்ணாவை இழந்து தவிப்பதாகவும், அவருடைய குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் வினோத்கண்ணா இணைந்து நான்கு இந்தி படங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1984ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்சாஃப் கெளன் கரேகா', 1991ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஃபாரிஸ்டே', 'கூன் கார் கார்ஜ்' மற்றும் 1993ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்சனியத் கெ தேவ்தா' ஆகிய நான்கு படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் இந்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆனவவை என்பதும் குறிப்பிடத்தக்கது
Share
Banner

Post A Comment: