Propellerads

About

Navigation
Recent News

கொழும்பு-பதுளைக்கான விசேட ரயில் சேவையை நீடிக்குமாறு கோரிக்கை

கொழும்பு-பதுளைக்கான விசேட ரயில் சேவையை, பதுளை மட்டும் நீடிக்குமாறு, பயணிகள், ரயில்வே திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்-சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, கொழும்பிலிருந்து பண்டவாரளைக்கு விசேட ரயில் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விசேட ரயில் சேவையானது, பண்டாரவளை மட்டுமே நீடிக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பண்டாரவளை ரயில் நிலையத்திலிருந்து 18 ரூபாய் செலவளித்து பதுளைக்கு பயணிக்க வேண்டியுள்ளதாகவும் பயணிகள் சுட்டிக்காடுகின்றனர்.

எனவே, தமது அசௌகரியத்தை தவிர்ப்பதற்கபாக, 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையேனும், கொழும்பு-பதுளைக்கான விசேட ரயில் சேவையை, பதுளை மட்டும் நீடித்துத் தருமாறு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Share
Banner

Post A Comment: