Propellerads

About

Navigation
Recent News

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5 இல்லை: மனோபாலா

பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மனோபாலா ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அதிமுகவின் முன்னணி பேச்சாளராக இருந்தார். பின்னர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளித்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா இறந்ததாக கூறப்படும் டிசம்பர் 5ஆம் தேதிக்கு முந்தைய நாள் தான் அப்பல்லோ சென்றதாகவும், அன்றே அங்கு அசாதாரண சூழ்நிலை இருந்ததாகவும், தன்னிடம் அமைச்சர் ஒருவரின் மைத்துனர் டிசம்பர் 4ஆம் தேதியே ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிடுங்கள் என்று கூறியதாகவும் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

எனவே டிசம்பர் 4ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிவரும் நிலையில் மனோபாலாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
Banner

Post A Comment: