பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய 'பாகுபலி 2' படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியது. வெளியான அனைத்து நாடுகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்டையும், ஊடகங்களின் வாழ்த்துக்களையும்
பெற்று வரும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
நேற்றைய முதல் நாளில் இந்த படம் ரூ.91,38,470 வசூல் செய்துள்ளது. இதில் தமிழ் பதிப்பு வசூல் மட்டும் ரூ.75,94,610 என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு பதிப்பின் வசூல் ரூ.14,01,270 மற்றும் இந்தி பதிப்பின் வசூல் ரூ.1,42,490 என்பதும் குறிப்பிடத்தக்கது சென்னையை பொருத்தவரையில் முதல் நாள் வசூலில் 'பாகுபலி 2' படத்தின் வசூல் 4வது பெரிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', இளையதளபதி விஜய்யின் 'தெறி' மற்றும் 'பைரவா' படங்களின் அடுத்த இடத்தை எந்தவித மாஸ் நடிகரும் இல்லாத படமான 'பாகுபலி 2' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: