இளையதளபதி விஜய் நேற்றும் இன்றும் ஈசிஆர் சாலையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த டைம் மிஷின் படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தின் இயக்குனர் ரவிகுமார் தனது மனைவிடன் இன்று இளையதளபதி விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
இயக்குனர் ரவிகுமார் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் ரவிகுமார் தம்பதிகள் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.
Post A Comment: