Propellerads

About

Navigation
Recent News

விஜய்யுடன் இணையும் வடிவேலு குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுவரை விஜய்-நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் தற்போதைய இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் காஜல் அகர்வால் இணைகிறார்.

அதுமட்டுமின்றி நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் இணையும் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளும் இந்த படப்பிடிப்பில் இடம்பெறவுள்ளது. சென்னை அருகேயுள்ள ஒரு ஈவிபி ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் 100வது படம் என்ற பெருமையை இந்த படம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: