Propellerads
Navigation

ஜீ.விக்கு ஜோடியாகும் பொலிவுட் நடிகை

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷூக்கு மாதம் ஒரு திரைப்படம் ஒப்பந்தம் ஆகி கொண்டிருக்கின்றது. 

ஏற்கெனவே அவர் அரை டஜன் திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து கொண்டிருக்கும் நிலையில்,  “100% லவ்” என்றத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அண்மையில் ஒப்பந்தமானார்.

இந்த திரைப்படத்தில் தமன்னா கேரக்டரில் அவரே நடிப்பார் என்று வதந்தி நிலவியது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்தத் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷாரதா கபூர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

அவரிடம் இந்தத் திரைப்படத்தில் நடிப்பது குறித்து படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தத் திரைப்படத்தில் நடிப்பது குறித்து ஷாரதா விரைவில் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிக்க ஷாரதா கபூர் ஒப்புக்கொண்டால் இதுவே அவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்கில் சுகுமார் இயக்கிய இந்தத் திரைப் படத்தை தமிழில் எம்.எம்.சந்திரமெளலி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது
Share
Banner

Post A Comment: