சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்களுக்கு கடந்த 80களில் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அம்பிகா. 'சகலகல வல்லவன்', 'காக்கி சட்டை', 'மாவீரன்', 'நான் சிகப்பு மனிதன்', 'படிக்காதவன்', 'அந்த 7 நாட்கள்', 'காதல் பரிசு', 'எங்கேயோ கேட்ட குரல்' உள்பட பல வெற்றி படங்களில் அம்பிகா நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய அம்பிகா, விரைவில் தன்னுடைய மகன் ராம்கேசவ் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாகவும், அவர் தமிழ், அல்லது மலையாள திரையுலகில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இன்றைய இளையதலைமுறை நடிகர்கள் திறமையை வளர்த்து கொண்டு திரையுலகிற்கு வருவதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றி வெற்றி பெற்று வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். அதேபோல் தனது மகன் ராம்கேசவும் திரையுலகில் நுழைவதற்கு முன் முறையான பயிற்சி பெற்று அறிமுகமாகவுள்ளதாக தெரிவித்தார். /*----success message----*/
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: