Propellerads

About

Navigation
Recent News

`வேலையில்லா பட்டதாரி 2' இசை, டிரெய்லர் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தேதியை தனஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

அதன்படி இசையும், டிரெய்லரும் வருகிற ஜுன் 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியாக இருக்கிறது. எனவே வருகிற 25-ஆம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கும் சிறப்பு விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
Share
Banner

Post A Comment: