Propellerads

About

Navigation
Recent News

2.0 பிரச்ச்னை அடுத்தகட்ட நடவடிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0 படத்தின் படப்பிடிப்பில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்க இயக்குனர் ஷங்கர் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த இயக்குனர் சங்கர் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து படக்குழுவினர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக பத்திரிகையாளர்கள் அறிவித்துள்ளன.

இரு தரப்பினர்களும் சுமூகமாக இந்த பிரச்சனையை கையாண்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.
Share
Banner

Post A Comment: