Propellerads
Navigation

புலிக்கு முதியவர்கள் பலியிடப்படும் கொடுமையை என்னவென்பது?

அரசாங்கம் வழங்கும் நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்வதற்காக முதியவர்கள் புலிக்கு பலியிடப்படுவது தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிப்பிட் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து புலிகளுக்கு இரையாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது.

இதுதொடர்பாக வன உயிர் குற்றத் தடுப்பு ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம், உயிரிழப்பவர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையை வழங்கி வருகிறது.

அதனைப் பெறுவதற்காக கிராம மக்கள், தங்கள் இல்லங்களில் உள்ள முதியவர்களை புலிகளுக்கு இரையாக வனப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தங்களின் நிலைக் கருதி, முதியவர்கள் தாங்களாகவே வனப்பகுதிக்கு சென்று புலிக்கு இரையாகி விடுகின்றனராம்.

வயதான காலத்தில் பெற்றோர்களை பாதுகாக்க இயலாமல், அவர்களை இவ்வாறு பலியிடுவதுடன், இதனை எதேச்சையான விபத்துக்கள் என்று கிராம மக்கள் நாடகமாடி வந்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: