Propellerads
Navigation

தனுஷின் 'கொடி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'தொடரி' சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'கொடி' திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 31வது படமான இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அக்டோபர் 5ஆம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக தனுஷ் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுடன் கைகோர்த்து உள்ளதால் இந்த படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் த்ரில்லர் படமான இந்த படத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: