Propellerads
Navigation

'பாகுபலி 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி 2' படத்தின் அதிகாரபூர்வமான சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
Banner

Post A Comment: