Propellerads
Navigation

'தொடரி' சென்சார் எப்போது?

தனுஷ் நடித்த 'தொடரி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் வரும் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்படுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சென்சார் முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் ரிசல்ட் வந்தபின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

பிரபுசாலமன் இயக்கியிருக்கும் இந்த பிரமாண்டமான படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ், கீர்த்திசுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், தம்பிராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவும், எல்.வி.கே தாஸ் படத்தொகுப்பும் செய்த இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
Share
Banner

Post A Comment: