Propellerads
Navigation

'கபாலி' யோகியின் 'ராணி'க்கு நடந்த பூஜை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் அவருடைய மகள் 'யோகி' கேரக்டரில் நடித்த தன்ஷிகாவின் நடிப்புக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படமான 'ராணி' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கும் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

சமுத்திரக்கனியின் இணை இயக்குனர் எஸ்.பாணி இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மற்றும் கேமரூன் ஹைலேண்ட் ஆகிய பகுதிகளில் ஒரே கட்டமாக 40 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் நேற்று தொடங்கியது. இதற்காக நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற பூஜைக்கு பின்னர் டப்பிங் பணிகள் தொடங்கியது. 'கபாலி'க்கு பின்னர் வெளிவரும் தன்ஷிகா படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Share
Banner

Post A Comment: