அதுமட்டுமின்றி தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனில் போய் உட்கார்ந்து கொள்ளாமல் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் உன்னிப்பாக கவனிப்பவர் என்று. இந்த முறையை அவர் மீண்டும் கடைபிடித்த படம் தான் 'இமைக்கா நொடிகள்' என்று இயக்குனர் அஜய்ஞானமுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முதல்முதலாக நயன்தாராவை சந்தித்து கதை கூறியவுடன், கதை குறித்தும் தன்னுடைய கேரக்டர் குறித்தும் ஏகப்பட்ட சந்தேகங்கள் கேட்டதாகவும், அவர் கேட்ட சந்தேகங்களில் இருந்தே அவர் இந்த கதையில் ஒன்றிவிட்டார் என்று தான் புரிந்து கொண்டதாகவும் கூறினார்.
மேலும் நயன்தாரா கேரக்டரின் நடை, உடை குறித்து தான் கூறிய ஐடியாவை ஏற்றுக்கொண்டதோடு அவரும் கூறிய ஒருசில விஷயங்களால் அந்த கேரக்டர், நான் எழுதும்போது இருந்ததை விட திரையில் இன்னும் அட்டகாசமாக வந்ததாக அஜய்ஞானமுத்து கூறினார். மொத்தத்தில் நயன்தாரா தன்னுடைய வேலையை மிகவும் சுலபமாக்கிவிட்டதாகவும், ஒரு நடிகை இவ்வாறு கதையில் ஒன்றி தனக்கு தோன்றும் ஐடியாக்களை கூறுவது நல்ல விஷயம் என்றும் அவர் நயன்தாராவுக்கு புகழாரம் சூட்டினார்.
மேலும் நயன்தாராவுக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை என்றும் அதேபோல் அவருக்கு ஆக்சன் காட்சிகளும் இல்லை என்றும் கூறிய அஜய்ஞானமுத்து, அதே நேரத்தில் நயன்தாரா ஒரு அட்டகாசமான பாடல் இருப்பதாகவும் தெரிவித்தார். நயன்தாராவின் முழு ஈடுபாட்டுடன் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

Post A Comment: