கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபல நட்சத்திரங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஒவ்வொரு நாளும் சினிமா டிரைலர் போல முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டு நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாகின.
அந்த வரிசையில் அமலாபால் வீடியோவும் ஞாயிறு அன்று வெளியாகும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அமலாபால் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, “ஞாயிற்றுக்கிழமை என்னோட வீடியோ வரும் என்று கூறினார்கள். அப்படி என்ன வீடியோ வெளியாகும் என்று நானும் ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் அதற்குள் அந்த கணக்கு செயலிழந்துவிட்டது. என் வீடியோவை பார்க்க முடியவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்” என்று அவர் கூறினார்.,
Post A Comment: