Propellerads
Navigation

ரஹ்மான பற்றி மனந்திறந்த சச்சின்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் வெள்ளி அன்று தமிழ் உள்பட இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சச்சின் தெண்டுல்கரே தனது கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்தும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்தும் சச்சின் கூறியதாவது: ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். அவருடைய இசை பலருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நான் முதன்முதலில் அவருடன் இணைந்து 'சச்சின் சச்சின் என்ற பாடலை கேட்டேன். அப்போது அந்த பாடலுக்குரிய அர்த்தத்தை அவர் விளக்கியபோது ஆச்சரியம் அடைந்தேன். மற்ற பாடல்கள் போல இந்த பாடலின் அர்த்தத்தை புரிந்து கொள்வது அவ்வளவு எளிது அல்ல என்பதை தெரிந்து கொண்டேன்.

இந்த பாடலின் வரிகள் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. அதற்கேற்றவாறு இசையையும் சரியான விகிதத்தில் கலந்து ரஹ்மான் இந்த பாடலை கொடுத்துள்ளார். இந்த பாடல் என்னை மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கே அழைத்து செல்லும் வகையில் இருந்தது.

இந்த படத்தை நான் மூன்று, நான்கு முறை பார்த்து விட்டேன். ஒருசில காட்சிகள் என்னை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்தது. என்னை நான் கண்ட்ரோல் செய்ய அதிக முயற்சியெடுத்தேன். என்னுடைய முழு வாழ்க்கையை இந்த உலகமே பார்க்க போகிறது. எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட ஒருசில விஷயங்களையும் இந்த படத்தில் வைத்துள்ளோம்' என்று கூறினார்.
Share
Banner

Post A Comment: