Propellerads
Navigation

ராணி எலிசபெத்துடன் கைக்குலுக்கிய கமல்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாசார ஆண்டு வரவேற்பு விழா, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம்  எலிசபெத், ஆரம்பித்து வைத்த இந்த நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்களில் உலக நாயகன் கமல்ஹாசனும் ஒருவர்.
 
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ராணி எலிசபெத்துடன் கமல்ஹாசன் கைகுலுக்கி தனது வணக்கத்தை தெரிவித்தார். ராணி எலிசபெத், அவருடைய வணக்கத்தை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.
 
ராணியுடன் கமல் கைகுலுக்கிய புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக இணையதளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த புகைப்படங்களை கமல் இரசிகர்கள் மிக அதிகமாக பகிர்ந்து செய்து வருகின்றனர்.

 
Share
Banner

Post A Comment: