Propellerads
Navigation

'பாகுபலி 2', ரஜினி குறித்து சச்சின் கருத்து

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 'மேரிகோம்', 'தோனி' படங்கள் போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சச்சின் தெண்டுல்கர் தனது திரையுலக அனுபவம் குறித்து கூறியதோடு தென்னிந்திய திரைப்படமான 'பாகுபலி 2' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2' படம் குறித்து அவர் கூறியபோது, ''பாகுபலி 2' படத்தின் வசூல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த படத்தின் வசூல் தொகையில் எத்தனை சைபர் இருக்கின்றது என்பது எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் நான் தலைவர் (ரஜினிகாந்த்) மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன்' என்றும் அவர் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: