Propellerads
Navigation

'பொன்னியின் செல்வன்' பொருத்தமானவர் யார்?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி, 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியை அடுத்து பெரிய இயக்குனர்களின் பார்வை சரித்திர படங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எடுக்க முயற்சித்து வரும் திரைப்படம் பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்' கதை தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் இந்த கதையை திரைப்படமாக எடுக்க முயற்சித்து ஒருசில காரணங்களால் கைவிட்டனர்.

இந்த நிலையில் 'பாகுபலி' படத்தின் வெற்றியை அடுத்து இந்த படம் ஒருவேளை தயாரானால் இந்த கதையின் நாயகன்களான வந்தியத்தேவன் மற்றும் ஆதித்யகரிகாலன் கேரக்டர்களில் நடிப்பது யார் யார்? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.

இந்த இரண்டு கேரக்டர்களில் பின்வரும் ஜோடிகளில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை கமெண்ட் பாக்ஸில் கருத்தும் கூறுங்கள் வாசகர்களே!


அஜித் - பவன்கல்யாண்

விஜய் - அல்லு அர்ஜூன்

விக்ரம் - மகேஷ்பாபு

சூர்யா - பிரபாஸ்
Share
Banner

Post A Comment: