Propellerads
Navigation

நடிகராகும் கண்ணதாசன் பேரன்

பழம்பெரும் கோலிவுட் நட்சத்திரங்களின் பேரன் பேத்திகள் சமீபகாலமாக கோலிவுட்டில் எண்ட்ரி ஆகி வருகின்றனர். நாகேஷ் பேரன் பிஜேஷ் சந்தானம் நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இரண்டு தலைமுறை ரசிகர்களை தனது எழுத்தால் கட்டிப்போட்டி வைத்திருந்த கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவந்திகா என்ற பிரபல குழந்தை நட்சத்திரம் அவருடைய மகளாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தயாரிப்பாளர்-இயக்குனர் கேயார் அவர்களின் உதவியாளரும், 'நேர் எதிர்' படத்தின் இயக்குனருமான ஜெயபிரகாஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் குறித்து இயக்குனர் ஜெயபிரகாஷ் மேலும் கூறியதாவது: பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே சிறுவயதில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் நாளடைவில் அவர்களிடையே ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிடும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கதைதான் இந்த படம். இந்த படத்திற்கு 'வானரப்படை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அபார்ட்மெண்டில் வாழும் குடும்பங்களின் நிலை குறித்தும் இந்த படத்தில் இருக்கும்' என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் மேலும் பல குழந்தைகள் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.
Share
Banner

Post A Comment: