இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கை அவ்ர் இயக்கவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி 'சார்லி' ரீமேக் படத்திற்கு முன்னர் அவர் ஒரு த்ரில் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு 'கரு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'வனமகன்' ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'கரு' படத்தை முடித்தவுடன் விஜய், 'சார்லி' ரீமேக் படத்தை இயக்கவுள்ளதாகவும், மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்த கேரக்டரில் மாதவன் மற்றும் சாய்பல்லவி நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வருட இறுதியில் தொடங்கப்படும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post A Comment: