தற்போது மலையாளத்தில் நடிகர் ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் அச்சாயன்ஸ் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அமலாபால்..
இந்த வருட ஆரம்பத்தில் சூப்பர்ஹிட்டடித்த ஆடுபுலியாட்டம் படத்தை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்..
இந்தப்படத்தில் அமலாபால் ஜாலியாக ஊரை சுற்றிவர ஆசைப்படும் பைக் ரைடராக நடிக்கிறாராம். அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் மூலம் மலையாளத்தில் முதன்முதலாக படும் வாய்ப்பும் அமலாபாலை தேடி வந்துள்ளது..
ஏற்கனவே வி.ஐ.பி படத்தில் நடித்தபோதே அமலாபாலுக்குள் ஒரு பாடகி ஒளிந்திருக்கிறார் என இசையமைப்பாளர் அனிருத் கண்டுபிடித்து சொன்னார்..
ஆனால் அந்தப்படத்திலும் அதன்பின்னும் அவருக்கு பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, இப்போது அச்சாயன்ஸ் படத்தில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் சொந்த ஊரிலேயே பின்னணி பாடகியாகவும் மாறியுள்ளார்.
அமலாபால் மட்டுமல்ல, இதில் நடிக்கும் பிரகாஷ்ராஜும் ஒரு பாடலை பாடவுள்ளார். அமலாபால் பாஸ்ட் பீட் பாடலும், பிரகாஷ்ராஜ் குத்துப்பாடலும் பாடவுள்ளதாக தெரிகிறது.
Post A Comment: