தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். நடைபெற இருக்கிற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அந்த சங்கத்தை கைப்பற்றுவோம் என்று விஷால் அறிவித்துள்ளார்.
இதற்கு காரணம் நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கம் சரத்குமாரை நேரடியாக ஆதரித்தது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்தார். இதனால் அவரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இடைக்கால நீக்கம் (சஸ்பெண்ட்) செய்தனர்.
இதை எதிர்த்து விஷால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர். "தனது கருத்துகளுக்கு விஷால் வருத்தம் தெரிவித்தால் இடைநீக்கம் திரும்ப பெறுவது பற்றி தயாரிப்பாளர் சங்கம் பரிசீலிக்கும்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இது தொடர்பாக விஷாலின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை இன்றும் நடக்கிறது.
Post A Comment: