Propellerads
Navigation

அதிதி தற்கொலை முயற்சி விவகாரம்: விஷால் நடவடிக்கை என்ன?

நெடுநல்வாடை' நாயகி அதிதிக்கு அப்படத்தின் இயக்குனர் செல்வகண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதன் காரணமாக நடிகை அதிதி தற்கொலைக்கு முயன்றதாகவும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து அதிதி கடந்த சில நாட்களுக்கு முன்பே தன்னிடம் புகார் கூறியதாகவும், ஆனால் அவர் நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இல்லாததால் தன்னால் அவருக்கு உதவ முடியவில்லை என்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறினார்

இந்நிலையில் மீண்டும் நடிகை அதிதி கடந்த இரு நாட்களுக்கு முன் நடிகர் சங்க அலுவலகத்திற்கு தனது சகோதரருடன் வந்த அதிதி, செல்வகண்ணன் மீது மீண்டும் புகார் கொடுத்ததாகவும், இம்முறை நடிகர் சங்கத்திற்கு வெளியே தன்னால் தனிப்பட்ட முறையில் என்ன உதவி அவருக்கு செய்ய முடியுமோ அதை கண்டிப்பாக செய்யவுள்ளதாகவும் விஷால் உறுதியளித்துள்ளாராம்.

மேலும் விரைவில் செல்வக்கண்ணனை சந்தித்து அவரது தரப்பு நியாயத்தையும் கேட்க இருப்பதாகவும், அதன்பின்னர் தன்னுடைய அடுத்தகட்ட செயல்பாடு இருக்கும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: