Propellerads
Navigation

கவர்ச்சிக்கு தயார்: வாய்ப்பு தாருங்கள்: சஞ்சிதா படுகோனே


கர்நாடகாவைச் சேர்ந்த மாடல் அழகி சஞ்சிதா படுகோனே. ராவணா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். ஜித்தன் ரமேஷ் நடித்த பிள்ளையார் கோவில் தெரு கடைசி வீடு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. சில தெலுங்கு படங்களில் நடித்த அவர் இப்போது தமிழ் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் வந்திருக்கிறார்.

"தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு, கார்த்தி, விஷால் என எனக்கு பிடித்த நடிகர்கள் தமிழில் இருக்கிறார்கள். மணிரத்னம், சுசீந்திரன், சுராஜ், அறிவழகன், ராதாமோகன், போன்ற இயக்குனர்களும் இங்குதான் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் சரளமாக பேசுவேன். நகரத்து பெண், கிராமத்து பெண் வேடம் இரண்டுமே எனக்கு பொருந்தும். கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் அதுதான் என் லட்சியம்" என்கிறார் சஞ்சிதா.
Share
Banner

Post A Comment: