Propellerads
Navigation

பேபியின் அடுத்த பாகம் தான் மீரா : டாப்சி

பேபி படத்தின் அடுத்த பாகத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த படத்திற்கு தற்போது மீரா என பெயரிட்டுள்ளார்களாம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டாப்சியிடம் மீரா படம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், மீரா படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். பேபி படத்தில் என் கேரக்டரை பார்த்து விட்டு பலரும், இது மேலும் வளர்ச்சி அடையும் என கருதுவதாக கூறினர்.

மீரா படத்தில் எனது கேரக்டர், பேபி படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மீரா, பேபி படத்தின் தொடர்ச்சியாகவும் அல்லது முடிவாகவோ இருக்கலாம். மீரா படம் பேபி பிரான்சிசின் ஒரு பாகம். ஆனால் இப்படம் தனி படமாக இருக்கும். அதே சமயம் கேரக்டர் அதன் தொடர்ச்சியாக இருக்கும் என்றார். மீரா படத்தை ஷிவம் நாயர் இயக்க உள்ளார். இப்படத்தில் மனோஜ் பாஜ்பேய், பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
Share
Banner

Post A Comment: