ஆனால், தற்போது அவரை இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் ஆகிய தமிழ்ப்படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க வைத்துள்ளனர். குறிப்பாக, இறைவி படத்தில் எனது மதிப்பு, மரியாதையை அதிகப்படுத்தும் வேடத்தை தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சமீபகாலமாக கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் என்னை குடும்ப குத்து விளக்காக மாற்றி விட்டார் அவர். அதனால் இந்த படத்திற்கு பிறகு என் மீது விழுந்துள்ள கவர்ச்சி இமேஜ் மறைந்து, குடும்ப நடிகை என்கிற இமேஜ் அழுத்தமாக பதிந்து விடும் என்று கூறும் அஞ்சலி, இனிமேல் இந்த இமேஜை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான கதைகளுக்கே முதலிடம் கொடுக்கப்போகிறாராம்.
அஞ்சலியின் இமேஜ் மாறப்போகிறதாம்!
கற்றது தமிழ் படத்தில் அஞ்சலியை அறிமுகம் செய்தவர் டைரக்டர் ராம். அதையடுத்து அங்காடித்தெரு படம் மூலம் பிரபலமான அவரை, கலகலப்பு படத்தில் இருந்து கவர்ச்சி நாயகியாக்கினார் சுந்தர்.சி. அந்த இமேஜ்தான் அதன்பிறகு அஞ்சலியை ஒட்டிக்கொண்டது. அதோடு, சிங்கம்-2வில் சூர்யாவுடன் குத்தாட்டமும் ஆடினார். தாய்மொழியான தெலுங்கிலும் குத்துபாட்டு நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு குட்டை பாவாடை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Post A Comment: