பிரபல டிவி நடிகை பிரதியுஷா பானர்ஜி இருதினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் சின்னத்திரை நட்சத்திரங்களை மட்டுமல்லாது பாலிவுட்டின் வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரது தற்கொலை சம்பவத்தில் பல மர்மங்கள் நிலவு வருகின்றன. இதுதொடர்பாக பிரதியுஷாவின் காதலர் ராகுல் மீது போலீசார் சந்தேகின்றனர், அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் பிரதியுஷாவின் தற்கொலை சம்பவம், நடிகர் சல்மான் கானை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். பிரதியுஷாவின் தற்கொலை செய்தி அவருக்கு தாமதமாக தெரிந்ததாகவும், அதை கேட்டவுடன் அவர் மிகவும் வருந்தியுள்ளார். சல்மானுக்கு பிரதியுஷாவை மிகவும் பிடிக்கும், ஏனென்றால் சல்மான் நடத்திய 'பிக்பாஸ் 7' நிகழ்ச்சியில், பிரதியுஷா பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post A Comment: