Propellerads
Navigation

தற்கொலைக்கு முயன்றாரா பிரியங்கா சோப்ரா?

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இந்தியாவின் சார்பில் விருது வழங்கும் நபராக, பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு உலகளவில் கவனம் பெற்றார். யுனிசெப் நல்லெண்ண தூதராகவும் இருக்கும் இவர், தன் பெயரில் அறக்கட்டளை நடத்தி அதுன் மூலம் பெண் கல்வியை ஆதரித்து உதவியும் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மனஅழுத்தம் காரணமாக 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பிரியங்காவிடம் மேனேஜராக இருந்த பிரகாஷ் ஜாஜூ என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரியங்காவிற்கு தவறான மெசேஜ்களை அனுப்பியதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரகாஷ் ஜாஜூ 67 நாட்களை ஜெயிலில் கழிக்கும் படி நேர்ந்தது. இந்நிலையில் பிரியங்கா குறித்த சில விஷயங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரகாஷ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

பிரகாஷ் ஜாஜூவின் சிறை அனுபவங்களை வைத்து 67 நாட்கள் என்ற படத்தை எடுக்கப்போவதாக, பிரியங்காவின் முன்னாள் காதலர் அஸீம் மெர்ச்சன்ட் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னுடைய சார்பில் வக்கீல் நோட்டிஸ் ஒன்றை பிரியங்கா,அஸீமிற்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில் இப்படம் விரைவில் உருவாகும் என்று பிரகாஷ் ஜாசு தற்போது தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டிவி நடிகை பிரதியுக்ஷா பானர்ஜி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரியங்கா குறித்து பிரகாஷ் ஜாஜூ வெளியிட்டுள்ள தகவல் பாலிவுட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Share
Banner

Post A Comment: