ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னிலியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். சன்னிலியோன் கவர்ச்சியாக நடித்து வருவதால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகிறார்.
போராட்டங்கள் மற்றும் போலீஸ் வழக்குகளையும் சந்தித்துள்ளார். சமீபத்தில் தனது ஆபாச படங்களையும், வீடியோவையும் இணையதளத்தில் வெளியிட்டார். இதனை கண்டித்து மும்பையை சேர்ந்த ஒரு பெண் போலீசில் புகார் அளித்தார். இந்திய பண்பாட்டுக்கு எதிராக சன்னிலியோன் செயல்படுகிறார் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் சன்னிலியோன், துஷார் கபூர், வீர்தாஸ் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான மஜ்தி ஜாதே இந்தி படத்தில் சன்னிலியோன் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சியில் நடித்து இருப்பதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கவ்ரவ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவிலில் நின்று கொண்டு சன்னிலியோனும், வீர்தாஸும் ஆணுறை விளம்பரம் செய்வது போன்ற காட்சியில் நடித்து உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்று புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.


Post A Comment: