Propellerads
Navigation

தனுஷுக்கு நன்றி தெரிவித்த சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் முடிவடைந்து நீண்டகாலமாக ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை பலமுறை அறிவிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் தள்ளிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. வெகுசீக்கிரத்தில் இப்படத்தை வெளியிட்டுவிட சிம்புவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இப்படம் சம்பந்தமாக நாளை மாலை திடீர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு சிம்பு ஏற்பாடு செய்துள்ளார். தனது படம் சம்பந்தமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்க வருகிறார் சிம்பு.

இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‘வாலு’ படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவிக்கப்போவதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்புவின் இந்த அறிவிப்புக்கு தனுஷ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

தனுஷின் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட சிம்பு, அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, தான் இதனால் சந்தோஷமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டாலும், நிஜவாழ்க்கையில் சிம்புவும், தனுஷும் உண்மையான நண்பர்கள் என்பதை பல நிகழ்வுகளில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதன் மற்றொரு வெளிப்பாடுதான் இருவருக்கும் நடந்த இந்த உரையாடல் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
Share
Banner

Post A Comment: