Propellerads
Navigation

சரத்குமாரிடம், விஷால் கேட்ட அந்த 3 கேள்வி




சரத்குமார், விஷாலின் பனிப்போர் நீண்ட நாட்களாக நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் சரத்குமார் ஒரு பேட்டியில் விஷால் சங்கத்தில் தேவையில்லாத குழப்பத்தை உண்டு செய்கிறார் என கூறினார்.
இத தொடர்ந்து விஷால், சரத்குமாரிடம் 3 கேள்விகளை கேட்டு விளக்கம் கொடுக்க கூறியுள்ளார். அந்த கேள்விகள் “1) நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக...இதைப்பற்றிக் கேட்கும் போது இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை காரணம் காட்டுகிறார்கள். 'பூச்சி' முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கினால் கட்டிடம் கட்டலாம் என்று சொல்லப்பட்டது.
இந்த வழக்கில் கட்டிடம் கட்டுவது தொடர்பான 'டீல்' செல்லாது என்று நீதிபதி சந்துரு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளார். 9 பேருக்கு பதிலாக 2 பேர் கையெழுத்திட்டால் அந்த 'டீல்' செல்லாது என்று அந்த சிங்கிள் பெஞ்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் டிவிஷன் பெஞ்ச் நீதிமன்றமும் இது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புகள் தவறா..?
2)கடந்த வருடம் நடந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் 2015 பொங்கலுக்குள் வழக்கை உடைத்து கட்டிடம் கட்டாவிட்டால் விஷால் சொல்லும் திட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். பொங்கல் முடிந்து மாதங்கள் பல மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் அதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
3)திரு. குமரிமுத்து அவர்கள் 'திருவாளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காகவே பைலா எண் 13-ன்படி நடவடிக்கை எடுத்து அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்கள். ஆனால் என்னை 'நாய்' என்று பேசி இழிவுபடுத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே...? அப்படியானால் பைலா எண் 13-ன் கீழ் நடவடிக்கை என்பது குமரிமுத்துவுக்கு மட்டும் தானா..? ஏன் துணைத்தலைவர் காளைக்கு அந்த சட்டம் பொருந்தாதா...?” என விஷால் கேட்டுள்ளார்.
Share
Banner

Post A Comment: