சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பாடல்கள் இருக்குமா? என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.
'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இந்தியில் அக்சயகுமார் நடித்த 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
இந்தியில் இந்த படத்தில் பாடல்களே இல்லாத நிலையில் தமிழிலும் பாடல்கள் இல்லாமல் இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் ''தானா சேர்ந்த கூட்டம்'' படத்தில் எட்டு பாடல்கள் இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தின் கதையோட்டத்தை எட்டு பாடல்களும் எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் உருவாக்கி சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் அனிருத் ஆச்சரியத்தை அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
Post A Comment: