கோலிவுட் திரையுலகில் சூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவரும் தற்போது ஒரே படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கார்த்தி நடிக்கும் படம் ஒன்றை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. 2D நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்கனவே 'பசங்க 2' படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பாண்டிராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' படத்தின் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: