Propellerads
Navigation

இமைக்கா நொடிகள்' படத்தின் ஒன்லைன் ஸ்டோரி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அஜய்ஞானமுத்து முதல்முறையாக இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த படத்தில் ஒருபக்கம் ஒரு தொடர் கொலைகள் நடந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு விதத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஒரு ஜாலியான ஜோடி, அதாவது அதர்வா-ராஷிகண்ணாவின் ஜோடி கதை போய் கொண்டிருக்கும். தொடர் கொலையும், இந்த ஜோடியும் ஒரு இடத்தில் இணையும் புள்ளியில் இருந்து தோன்றும் திருப்பம் தான் இந்த படத்தின் கதை. 
 
இந்த தொடர் கொலையால் அதர்வா-ராஷிகண்ணா ஜோடி ஏன் பாதிப்பு அடைகின்றனர், அந்த பாதிப்பில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை த்ரில்லுடன் கூறியிருப்பதாக இயக்குனர் அஜய்ஞானமுத்து கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் டைட்டில் 'இமைக்கா நொடிகள்' என்று வைத்ததற்கு மிக முக்கிய காரணம் உள்ளது. அந்த காரணம் அடுத்து வரும் டிரைலரில் உங்களுக்கு ஓரளவு புரியும், படம் பார்க்கும்போது இந்த டைட்டில் இந்த படத்துக்கு பொருத்தமானது என்பது ஆடியன்ஸ்களுக்கும் புரியும் என்று கூறினார். அஜய்ஞானமுத்துவின் இந்த பேட்டி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ள இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது.
Share
Banner

Post A Comment: