சீனியர் நடிகர்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றை நிறுவும் விஷாலின் திட்டத்துக்கு உதவும் வகையில், பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதகுமாரி, ஈசிஆர் பகுதியில் உள்ள தன்னுடைய நிலத்தை தர முன்வந்துள்ளார்.
“முதியோர்களுக்காக ஒரு இல்லம் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நடிகர் சங்கத்துடன் கைகோர்த்து தற்போது இந்த முதியோர் இல்லம் ஆரம்பிக்கும் முயற்சிக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்றும் லிலிதகுமாரி கூறியுள்ளார்.
நடிகை லலிதகுமாரி, பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் மகளும், கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: