சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இலங்கை வர நினைத்தால் தாராளமாக வரலாம். அவர் இலங்கையிலும் பிரபலமான நடிகர்தான். அவருக்கு அங்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அவர் வருவதில் ஒரு பிரச்சினையும் இல்லையென இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகே டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ரஜினி திட்டமிட்டிருந்தார்.
ஆனால், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒருசிலரின் எதிர்ப்பு காரணமாக இலங்கை பயணத்தை இரத்து செய்துவிட்டார்.
இந்த விடயத்தில் அரசியல் தலைவர்கள் மீது ரஜினி அதிருப்தி அடைந்ததாகவும், அவர் தனிக்கட்சி தொடங்க எடுத்திருக்கும் முடிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது.
தற்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதால் கூடிய விரைவில் ரஜினியின் இலங்கை பயணம் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: