Propellerads
Navigation

கஜோலின் பதவி பறிப்பு



தனுஷ் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினி இயக்கிய “விஐபி 2” திரைப்படத்தில், நடிகை கஜோல் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை கஜோல் தற்போது வகித்து வரும் பிரசார் பாரதி அமைப்பு உறுப்பினர் பதவியை பறிக்க இந்திய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி அமைப்பில் உறுப்பினராக உள்ள நடிகை கஜோல், மூன்று முறைக்கு மேல் தகவல் தெரிவிக்காமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த அமைப்பின் விதிமுறைகளின் படி, தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பங்கேற்காததால் அவரது உறுப்பினர்களின் பதவியை பறிப்பது குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து கஜோலின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “குடும்ப நிகழ்வுகள், மருத்துவ காரணங்கள் மற்றும் முன்பே கொடுக்கப்பட்ட கோல்ஷீட் விவகாரங்களால் அவரால் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை” என்றார்.
Share
Banner

Post A Comment: