‘குப்பத்துராஜா’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஜி.வி.பிரகாஷ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட போது, இந்த விபத்து ஏற்பட்டதாக படக்குழு தரப்பு கூறியிருக்கிறது.
சைக்கிளில் செல்வது போன்ற ஒரு காட்சியும், மேல்மாடி கூரைகளின் மேல் ஏறி ஓடும்படியான காட்சியும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் மாடி கூரையின் மீதிருந்து எடுக்கப்பட்ட காட்சியில், ஜி.வி.பிரகாஷ் கீழே விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீவிரமான காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வருகிறார். பாபா பாஸ்கர் இயக்கும் இப்படத்தில் ஜி.வி. உடன் இணைந்து பார்த்திபன், பலக் லல்வானி, பூனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
Post A Comment: