Propellerads

About

Navigation
Recent News

எத்தனை கோடி கொடுத்தாலும் அதுக்கு ஈடாகாது

ஜனதா கேரேஜ் படத்தைத் தொடர்ந்து விஜய் 61, அநீதி கதைகள், இரும்புத்திரை, சாவித்ரி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் என ரொம்ப பிசியாகவே இருக்கிறார் சமந்தா. 

அதோடு, சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படத்திற்காக சிலம்பக் கலை பயிற்சியும் எடுத்து வருகிறார். தனது வருங்கால கணவரான நாக சைதன்யாவும் தான் நடிப்பதற்கு எந்த தடையும் விதிக்காததால் தொடர்ந்து நடிப்பில் அதிகப்படியான ஈடுபாடுகாட்டி வருகிறார் சமந்தா.

அதுமட்டுமின்றி, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மட்டுமே தற்போது ஓகே சொல்லி வரும் சமந்தா, ஒரு கேரக்டருக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் தான் தயாராக இருப்பதாக டைரக்டர்களிடம் கூறி வருகிறார். 

இதற்கு முன்பு நான் சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அதற்கு நல்லவிதமான விமர்சனங்களும் கிடைத்துள்ளது. எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்திருக்கிறது என்றாலும் நான் கவலைப்படவில்லை. என் வேலையை சரியாக செய்ததாகவே கருதுகிறேன்.

மேலும், சில கதாபாத்திரங்கள் நமக்கு மனதளவில் திருப்தி கொடுக்கிறபோது பெரிய மனநிறைவு கிடைக்கும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அந்த திருப்திக்கு ஈடாகாது. அதனால், இப்போது பணம் என்பதை கடந்து ஒரு நடிகையாய் என்னை திருப்திப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களாக தேடுகிறேன் என்கிறார் சமந்தா.
Share
Banner

Post A Comment: