சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், மத்திய,மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த திரையுலகினர்களும், இணைந்து வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய தலைவர்கள் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய தலைவர்கள் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது தமிழ் திரையுலகின் பிரச்சனைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து உரைக்கப்படும் என்றும் குறிப்பாக திருட்டு டிவிடி பிரச்சனை, திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் முதல்வரிடம் இருந்து உறுதிமொழி கிடைத்தால் வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த போகின்றவர்கள் யார் யார் என்ற விபரம் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Post A Comment: