Propellerads
Navigation

'விவேகம்' டீசர்: 11 மணி நேரத்தில் 22.5 லட்சம் பார்வையாளர்கள்

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் நேற்று நள்ளிரவில் வெளியாகி அஜித் ரசிகர்களின் விடாத முயற்சியால் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருகிறது.

'விவேகம்' டீசர் வெளியாகி தற்போது 11 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் இதுவரை இந்த டீசரை 22 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 2 லட்சத்து 25 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

விவேகம் டீசரை அஜித் ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவதாகவும், இவ்வாறு நடந்திருக்காவிட்டால் யூடியூபில் 'விவேகம்' டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் 'விவேகம்' டீசர் அமைந்திருந்ததால், அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: