கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தின் நாயகி மஞ்சிமா மோகன், தனது சமூக வலைத்தளத்தில் “இரசிகர்கள், நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கவே திரையரங்குக்கு வருகிறார்களா?” என்பது குறித்து தனது கருத்தை அண்மையில் தெரிவித்துள்ளார்.
"இரசிகர்கள் நடிகைகளை ஆடை இல்லாமல் பார்க்கத்தான் திரையரங்குக்கு வருகிறார்கள் என்று நீங்கள் கருதினால் அந்த கருத்து முற்றிலும் தவறு.
இரசிகர்கள் எப்போதுமே நல்ல தரமான திரைப்படங்களை பார்க்கவே திரையரங்குக்கு வருகிறார்கள். நடிகைகளின் ஆடைக்குறைப்பையோ அல்லது நடிகையின் நிர்வாணத்தை பார்க்கவோ அல்ல” என்று காட்டமாக கூறியுள்ளார்.
இந்த கருத்து மஞ்சிமா மோகன், இரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இயக்குநர் சுராஜ், “இரசிகர்கள் திரையரங்குக்கு வருவது நடிகைகளின் கவர்ச்சியான அழகை ரசிக்கவே” என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்து, பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment: