’36 வயதினிலே’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜோதிகா பிரம்மாவின் ‘மகளிர் மட்டும்’,பாலாவின் ‘நாச்சியார்’ ஆகிய 2 படங்களில் நடித்து வந்தார். இதில் ‘மகளிர் மட்டும்’ படத்தை ‘க்ரிஷ் பிக்சர்ஸ்’ நிறுவனதுடன் இணைந்து சூர்யா தனது ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
ஜோதிகாவுடன் சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி, நாசர், லிவிங்க்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனராம். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதன் டீசர் & ‘அடி வாடி திமிரா’ எனும் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் படக்குழுவால் ட்விட்டப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, படத்தின் இசை & டிரையிலரை (ஏப்ரல் 24-ஆம் தேதி) சென்னை சத்யம் சினிமாஸில் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இவ்விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார், இயக்குநர்கள் பிரம்மா, சுதா, தரணி, நடிகைகள் ஜோதிகா, நக்மா, ஊர்வசி மற்றும் ‘மகளிர் மட்டும்’ டீம் கலந்து கொண்டனர். இந்த டிரையிலர் & பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருவதோடு, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
தீம் மியூசிக்குடன் சேர்த்து மொத்தம் 8 பாடல்களில், ‘குபு குபு குபு’ எனும் பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளாராம். இவர் ஏற்கெனவே ‘பிரியாணி’ படத்தில் இடம்பெற்ற ‘மிஸ்ஸிசிபி’ பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மகளிர் மட்டும்’ படத்தை ‘சக்தி பிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில் பி.சக்திவேலன் வருகிற மே மாதம் ரிலீஸ் செய்யவுள்ளார்.
Post A Comment: