பாகுபலி திரைப்படக்குழு, ஏப்ரல் 28 தேதி இப்படம் வெளியான பின் மகிழ்ச்சியுடன் விடுமுறை கொண்டாட பல காரணங்கள் உண்டு. பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்திற்காக படக்குழுவினரின் நான்கு வருட வாழ்க்கை செலவழிக்கப்பட்டுள்ளது.
மிகவும் கஷ்டமான படத்தயாரிப்பு திட்டமிடலில்,இக்குழுவிற்கு எந்த விஷயம் தரமான காட்சிகளை கொடுப்பதற்கு ஊக்குவிப்பதாக இருந்தது? இந்தியாவில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்காக இக்குழு தங்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு தியாகம் செய்துள்ளார்கள் ? பாகுபலி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் நமக்கு அளித்த பிரத்யோக பேட்டியின் வாயிலாக இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை அவர் கூற நாம் இப்போது பார்ப்போம்.
பாகுபலி திரைப்படத்திற்கு முன்னதாக ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் இயக்குநர் ராஜமெளலியுடன் இணைந்து மகதீரா மற்றும் ஈகா போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளார். “இயக்குநர் ராஜமெளலியுடன் நான் இணைந்து பணியாற்றும் 8வது திரைப்படம் பாகுபலி, அவர் ஒரு தொலைநோக்காக சிந்திக்கும் இயக்குநர். அவர் சிந்தனையில் அதிகமாக இது போன்ற அற்புதமான எண்ணங்கள் உள்ளது, அனைத்து விஷயங்களையும் மிக சரியாகவும் முன்கூட்டியே திட்டமிட்டும் வைத்திருப்பவர்.”
இந்த 4 ஆண்டுகளும் செந்தில் குமாருக்கு வெளியுலக வாழ்க்கை என்பதே இல்லை என்று அவர் கூறியுள்ளார், “மிகப்பிரம்மாண்டமான இப்படத்திற்கு முன் தயாரிப்பு பணிகள் மிகவும் நுனுக்கமாக இருக்கு வேண்டியது இருந்தது அதில் நானும் ஒரு பகுதியாக இருந்தேன். அதன் பின் தான் இப்படத்திற்காக படப்பிடிப்புகள் தொடங்கியது, இப்படம் பெரும்பாலும் ஹைதராபாத் நகரில் எடுப்பட்டாலும் என்னுடைய வீட்டிலிருந்து மிக தூரத்தில் இருந்த ஸ்ரீ ராமோஜி ஃபிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டது, அதனால் நான் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து படப்பிடிப்பு தளத்திற்கு அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் வரவேண்டியதிருந்தது ஏன் என்றால் படப்பிடிப்பு அதிகாலை 7.00 மணிக்கெல்லாம் துவங்கிவிடும். மாலை 6.00 மணிக்கு படப்பிடிப்புகள் நிறவடைந்தாளும் நான் 7.00 மணி வரை அங்கு இருக்கு வேண்டிய திருந்தது காரணம் அடுத்த நாள் படப்பிடிப்பை திட்டமிடுவதற்காக, அதன் பின் என்னுடைய வீட்டிற்கு அந்த நெரிசலான போக்குவரத்துகளில் செல்ல இரவு 9.30 மணியாகிவிடும், என்னுடைய 5 வருட வாழ்க்கையில் இது தான் தினசரி நிகழ்வாக இருந்தது, பிற சில படங்களில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு சில நாட்கள் ஓய்வு எடுப்போம், ஆனால், பாகுபலி போன்ற படங்களுக்கு அவ்வாறான நடைமுறைகள் இல்லை, இப்படத்தில் இடம்பெற்றுள்ள போர் காட்சிகளை படமாக்கும்போது தொடர்ந்து 120 நாட்களுக்குமேல் படப்பிடிப்பு நடைப்பெற்றது அதனிடையே ஒரு சில நாட்கள் மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்டோம்.
அந்த படப்பிடிப்பு தளத்தின் வெளியே நாங்கள் காட்சிகளை படமாக்கும்போது மாலை 6.00 மணிக்கெல்லாம் வெளிச்சம் குறந்துவிடுவதால் படப்பிடிப்பை நிறைவு செய்துவிடுவோம். ஆனால், ராமோஜி ஃபிலிம் சிட்டி உள்ளே படப்பிடிப்புகள் நடத்தும்போது தேவை இருந்தால் பின்னிரவுகள் கூட நீட்டித்துக்கொள்வோம் ஏனென்றால் படப்பிடிப்பிற்காக நாம் தயார் செய்திருந்த மின் விளக்குகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதால். அதனால் படப்பிடிப்புகளில் நடத்தும்போது தாமதம் ஏற்ப்பட்டாலோ அல்லது காட்சிகளை மேம்படுத்த வேண்டியதிருந்தாளோ நள்ளிரவு வரை படப்பிடிப்புகளை நடத்துவோம், எங்களுடைய முதன்மையான நோக்கமே அந்த காட்சிகளை மிகச்சரியாக முடிக்க வேண்டும் என்பது தான் அதற்காக 24 மணி நேரம் வரை கூட சில சமயங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்”.
எதுவும் எங்களை தடுக்க இயலாது
படப்பிடிப்பு இடங்களையும் கூட செந்தில் குமார் மேம்படுத்த வேண்டியதிருந்தது. அதை பற்று அவர் கூறுகையில் “தொடர் மழையின் காரணமாக மாஹாபல்லீஸ்வர் பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்த படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தது. வானிலை அறிக்கையில் தெளிவான வான மூட்டத்துடன் அப்பகுதி இருப்பதாக கூறியிருந்ததால் படப்பிடிப்பு குழுவுடன் அப்பகுதிக்கு நாங்கள் வந்தோம், நாங்கள் சற்றும் எதிர்ப்பார்காத மழையினால் எங்களுடைய வேலைகளுக்கு தொந்தரவு ஏற்பட்டது. முழு படப்பிடிப்பு குழுவும் காத்திருந்ததால், படப்பிடிப்பு திட்டமிடலை மாற்றிஅமைத்து மேம்படத்தாலாம் என்று கூறினேன்,குறைந்த ஒளிகளில்,மேகமூட்ட பின்னணியில் படமாக்கலாம் என்றும் கூறியிருந்தேன், அதனால் அன்று அனைத்து காட்சிகளையும் நேரத்தை வீனடிக்காமல் வேறு மாதிராயன பின்னூட்டத்தில் படமாக்கினோம்”.
செந்தில் குமார், அவருடைய குடும்பத்தினர் தன்னுடைய வேலைக்கும் மிகவும் உறுதுணையாக இருந்ததால் பெரிதும் நன்றி சொல்லிக்கொள்கிறார் “அதிகமான நேரத்தினை இந்த படப்பிடிப்பு வேலைக்காக தியாகம் செய்துவிட்டதால் என்னுடைய பொதுவாழ்க்கை என்பது ஒன்றுமே இல்லாததாக ஆகிவிட்டது, என்னுடைய இரண்டும் மகன்களும் ஒருவனுக்கு 4 1/2 வயதும் மற்றொருவனும் 3 1/2 வயதும் இருந்தது பாகுபலி படம் துவங்கும் போது, அவர்களின் வளர்ச்சியை நான் பார்க்கவே இல்லை, இவை அனைத்தும் எனக்கு பக்கபலமாக இருந்து கவனித்துக்கொண்டது என்னுடைய மனைவி ரூபி, என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய தங்கை ஆகியோர் தான். அவர்கள் வீட்டை நல்லபடியாக பார்த்துக்கொண்டதால் என்னால் என்னுடைய வேலையில் முழு கவனம் செலுத்த இயன்றது”.
செந்தில் குமார் அவரின் தந்தை இறப்பிற்கு கூட துக்கம் அனுசரிக்க சரியாக நேரம் செலவிடவில்லை. “என்னுடைய தந்தை இறந்த போது நான் பாகுபலி முதல் பாகத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தேன், அவருக்கு ஹைதரபாத்தில் நெஞ்சிவலி ஏற்ப்பட்டது, நான் ஹைதரபாத்திற்கு விரைந்து வந்தேன், என்னால் 2 நாட்கள் மட்டுமே என்னுடைய தந்தை இறப்பு துக்க அனுசரிப்புக்கு செலவிடமுடுந்தது. அவருடைய இறுதி சடங்கில் என்னால் முழுமையாக ஈடுப்படுத்திக்கொள்ள முடியவில்லை, இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் கூட இயக்குநர் ராஜமெளலியின் தொலைத்தூர சிந்தனையும் இப்படத்தின் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையும் தான் தூண்டுகோலாக அமைந்தது. அதன் பின் பாகுபலி முதல் பாகத்திற்கு மக்கள் அளித்த வரவேற்ப்பு எங்களை அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் முழு மூச்சாயாக வேலைப்பார்ப்பதற்கு தூண்டுகோலாக அமைந்தது.”
நடிகர் பிரபாஸ், நடிகர் ராணா, நடிகை அனுஷ்கா செட்டி, நடிகை தமன்னா,நடிகர் சத்யராஜ், நடிகர் நாஸர், நடிகை ரம்யா கிருஷ்னன் ஆகியோர் நடிப்பில் இம்மாதம் வெளிவரயிருக்கிறது பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.
Post A Comment: