வசனம் பேசாத வனமகன்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, சாயிஷா இணைந்து நடித்திருக்கும் படம் - 'வனமகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் வெளியாகும் 50-ஆவது படமான இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
வனமகன் படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. ஏ.எல்.விஜய் படங்களுக்கு நா.முத்துக்குமார்தான் அனைத்து பாடல்களையும் எழுதுவார். அவரது மறைவினால் வனமகன் படத்தின் அனைத்து பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். ஆனாலும் நா.முத்துக்குமாரின் நினைவு அஞ்சலியாக, வனமகன் படத்தின் பாடல் சி.டி.யை படக்குழுவினர் வெளியிட, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் முத்துக்குமார் பெற்றுக்கொண்டார்.
காடு மற்றும் காட்டு மனிதர்கள் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் 'ஜெயம்' ரவி காட்டில் வசிக்கும் இளைஞராக நடித்துள்ளார். அதனால் 'ஜெயம்' ரவிக்கு இந்தப்படத்தில் வசனங்களே இல்லை! முழுக்க முழுக்க சைகையிலேயே நடித்திருக்கிறாராம் 'ஜெயம்' ரவி. அவர் நடித்த வேடங்களிலேயே இந்த வேடம் பேசப்படும் விதமாக அமைந்திருக்கிறதாம்.
Post A Comment: